Advertisment

ஸ்மைல் மேன் ஆக மாறும் சுப்ரீம் ஸ்டார்!

sarathkumar starring the smile man movie first look poster goes viral

இயக்குநர்கள் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் ’தி ஸ்மைல் மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சிஜா ரோஸ், இனிய ராஜ்குமார், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சரத்குமாரின் 150 படமாக உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் மேக்னம் மூவிஸ் நிறுவனம் சார்பில் சலீஸ் தாஸ் தயாரிக்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுவதும் மறந்து போகும் முன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். இதனை அடிப்படையாக முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisment

tamil cinema sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe