/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/428_2.jpg)
அரசியல், சினிமா என இரு தளங்களிலும் பயணித்துக்கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். தற்போது அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'என்கவுண்டர்'. இப்படத்தினுடைய ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் கம்பீரமான தோற்றத்தில் சரத்குமார் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. சரத்குமார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார். வி.ஆர்.மூவிஸ் பேனரில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கிறார். இனியா,நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ்.டி.வேந்தன் இயக்கியிருக்கிறார். இவர் 2012-ல் வெளியான 'மயங்கினேன் தயங்கினேன்' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'வேளச்சேரி துப்பாக்கிச் சூடு' என்ற தலைப்பில் பூஜையோடு தொடங்கிய இப்படம், பணிகள் முடிந்தும் நீண்ட காலமாக வெளிவரவில்லை. தற்போது 'என்கவுண்டர்' என்ற தலைப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)