Advertisment

இந்த மாதிரி கதையை யாரும் கூறமாட்டார்களா? என எதிர்பார்த்தேன்- சரத்குமார் நெகிழ்ச்சி

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தை ‘படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.

Advertisment

sarathkumar

குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Advertisment

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக உருமாறி வரும் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வருகிற ஃபிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. மணிரத்னம், படத்தில் நடித்த ராதிகா, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது சரத்குமார் பேசுகையில், “தனா கதை கூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன், பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.

maniratnam sarathkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe