sarathkumar shares vijay thalapathy66 film updates

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகாமந்தனா நடித்துவருகிறார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாகஷியாம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்தசில தகவல்களை நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், "தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். நான் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பில் இணைக்கிறேன். இந்த படத்தின் கதை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கும். கண்டிப்பாக இந்த இந்த படம் அனைத்து தரப்புரசிகர்களுக்கும் பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment