Skip to main content

“அனைத்து மதத்தினருக்குமானது” - பிரதமருக்கு சரத்குமார் பாராட்டு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
sarathkumar praised pm modi regards baps hindu temple opening in abu dhabi

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

அதன்படி அபுதாபியில் பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. ரூ.700 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று 14.02.2024 நடந்த நிலையில் இரண்டு நாள் அரசு பயணமாக அங்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்று திறந்து வைத்தார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களோடு, சுரேஷ் கோபி, அக்‌ஷய் குமார், ஷங்கர் மகாதேவன், விவேக் ஓபுராய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அந்த வகையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், பங்கேற்றார். பின்பு கோயில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு சிறந்த அனுபவம். அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைக் இந்த கோயில் பிரதிபலிக்கிறது. இதை சாத்தியமாக்கிய ஐக்கிய அரபு எமிரேட் அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுக்கள். இந்த கோயில் நம் கலாச்சாரத்தின் அற்புதமான சான்று. இது அனைத்து மதத்தினருக்கான ஒரு கோயில். இந்தியர்களுக்கும் இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும்” என்றார். 

சார்ந்த செய்திகள்