hjd

Advertisment

கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்துதயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (இன்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சரத்குமார் 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''சிறந்த படம். நமக்குத் தேவைப்படும் மணிநேர செய்தி இது. நடிப்பில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார் ஜோதிகா. படத்தை நன்கு வடிவமைத்துள்ளார் ஃபிரடெரிக். பொன்மகள் வந்தாளின் முழு அணிக்கும் இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.