
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.
பாண்டுவின் இந்தத் திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)