Advertisment

சரத்குமாரின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்!

sarathkumar

திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் எம்360 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் உருவாகும்'சமரன்'படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், மண் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளது. தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறுகையில், "இந்த கதை முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்குத்தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாப்பாத்திரத்திற்கு சரியான நபராக எனக்குத்தோன்றியது சரத்குமார்தான். இயக்குநரும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையைக் கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதையில் மண்ணின் மகளாக மீனாட்சி எனும் ஒரு முதன்மை கதாப்பாத்திரத்தில் திருமதி. சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்தக்கதையை மிக நேர்த்தியாகவும், இதுவரை மக்களுக்குச் சொல்லப்படாத விஷயத்தைச் சொல்லும் விதமாகவும் அமைத்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.

Advertisment

sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe