/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Etb97zzVkAEOTPa.jpg)
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்.இவர், 'ருத்ரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில், லாரன்ஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ஃபைவ் ஸ்டார் கதிரேசனே படத்தைத் தயாரிக்கிறார்.
இந்நிலையில், ‘ருத்ரன்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சரத்குமார், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா’ படத்தில் லாரன்ஸுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)