/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/419_1.jpg)
அறிமுக இயக்குநர்தட்சிணாமூர்த்தி ராமர்இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்தின் ஜனனி, ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை திரிபுர கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை பின்னணியில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாக்கவுள்ளது.
இப்படம் குறித்து படத்தின் படத்தின் இயக்குனர், தட்சிணாமூர்த்தி ராமர் கூறுகையில்.“கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்து உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார். இதுவரை சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்" என்றார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 66' படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)