sarathkumar announce Surya Vamsam 2 will happen shortly

சரத்குமார் நடிப்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூர்ய வம்சம்'. விக்ரமன் இயக்கியிருந்த இப்படத்தில் தேவயானி கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Advertisment

குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. குறிப்பாக சின்ராசு குழந்தை, அவரது தாத்தாவான சக்திவேலுக்கு பாயசம் கொடுக்கும் காட்சி மீம்ஸ் ரகமாக அமைந்தது.

Advertisment

இப்படம் கடந்த ஆண்டு இன்றைய தேதியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனைமுன்னிட்டு சரத்குமார், "இப்படத்தில் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. இதுவரையில் திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையில்மக்கள் பார்த்த சாதனையை இன்று வரை வைத்திருப்பதும், ஒரு வருடம் வரை படம் ஓடியதும் சாதாரண விஷயமல்ல. இது போன்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை மீண்டும் கொடுக்கும் வகையில் கடினமாக உழைப்பேன்" என ட்விட்டரில் குறிப்பிட்டு நெகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில் இன்றுடன் இப்படம் 26 ஆம் ஆண்டை கடக்கிறது. இதை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்ட சரத்குமார், "கலைத்துறை பயணத்தில்காலங்கள் கடந்தும்தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும்இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடியசிறப்பு வாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்துமாபெரும் வெற்றியளித்து ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி. விரைவில் சூர்யவம்சம் 2" எனக் குறிப்பிட்டுள்ளார்.