/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sarathkumar_9.jpg)
முத்தையா முரளிதரன் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் இதில் நடிக்க இருந்த விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு அளிக்கப்பட்ட மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் தரங்கெட்டு, தராதரம் கடந்து கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பெண் குழந்தைகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.
உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம், என்ன நடக்கப்போகிறது என்று மெத்தனமாக சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கி இதுபோன்ற தரங்கெட்ட செயல்களை கட்டுப்படுத்தி, ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)