“ஹவுஸுக்கும் ஹோமுக்கும் வித்தியாசம் உண்டு” - விளக்கிய சரத்குமார்

06

சித்தார்த் நடிப்பில்  '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 

இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சிம்பு பாராட்டு தெரிவித்திருந்தார். படத்தை பார்த்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படம் உணர்ச்சிப்பூர்வமான பயணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்களின் காட்சி நடைபெற்று நிறைவுற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சரத்குமார், ஹவுஸ்(House) என்பதற்கும் ஹோம்(Home) என்பதற்கும் வித்தியாசம் உண்டு எனக் கூறி விளக்கமளித்தார்.  

சரத்குமார் செய்தியாளர்கள் முன்பு பேசியதாவது, “இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போதே, ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டும் என்று சொன்னார். இப்படத்தை மக்கள் தொடர்பு படுத்தி கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார். அதில் எனக்கு கேள்வி இருந்தது. ஆனாலும் அவர் நம்பிக்கையோடு இருந்தார்” என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், “ஹவுஸுக்கும் ஹோமுக்கும் வித்தியாசம் உண்டு. ஹவுஸ் என்பது வீடு, ஆனால் ஹோம் என்பது அனைவரும் ஒன்றாக பாசப்பிணைப்போடு இருப்பது. அதனால் அனைவரும் ஹவுஸை உருவாக்குவதை விட ஹோமை உருவாக்க வேண்டும்” என்றார்.

director sri ganesh sarathkumar siddharth
இதையும் படியுங்கள்
Subscribe