Advertisment

சரத்பாபு உடல் தகனம்

Sarathi Babu cremated

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

சரத்பாபுவின் உடல் தி.நகரில் இருந்துகிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

sarathbabu
இதையும் படியுங்கள்
Subscribe