Skip to main content

"சரத்பாபு பூரண குணமடைய வேண்டும்" - நடிகை பதிவு

 

sarathbabu in hospital

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கை தாண்டி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 

 

இவர் நடிப்பில் கடைசியாக நடிகர் சிம்ஹா ஹீரோவாக நடித்த 'வசந்தமுல்லை' படம் வெளியானது. இந்த நிலையில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் பூரண குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் தெலுங்கு நடிகை கல்யாணி பாதலா, "எனக்குப் பிடித்த ஹீரோ. அப்போது பெண்களின் கனவுகளின் இளவரசன் சரத்பாபு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.