Sarath Kumar's advice to new directors

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் சரத் குமாரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவரிடம் புதிதாக வரும் இயக்குநர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுக்க உள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்குப் பதிலளித்த அவர், “என்னுடைய மனைவியை வைத்து படம் எடுக்க நான்கு இயக்குநர்களை வைத்திருந்தேன். அவர்களிடம் ஒரு கதைக் களத்தை உருவாக்கச் சொன்னேன். அந்த கதை ஒரு கிராமத்துப் பின்னணியில் பெண்கள் எப்படி பிரச்சனைகளைக் கையாள்கிறார்கள், அவர்களைச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது என்று விஷயங்கள் உள்ளடக்கி இருக்க வேண்டும் என கூறினேன். அதுபோல புதிதாக வரும் இயக்குநர்கள் மார்கெட் இருக்கும் நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்குப் பதிலாக திறமையாக நடிப்பவர்களை வைத்து படம் எடுக்கலாம்.

Advertisment

என்னுடைய மனைவிக்கு நிகர் யாருமே கிடையாது என்பதை தைரியமாகச் சொல்லுவேன். ‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் அவர் அருமையாக நடித்திருப்பார். ஒரு நாள் இரவு 1 மணிக்கு பாலா கால் செய்து ராதிகாவிடம் பேச முடியுமா என்று கேட்டார். முதலில் அவர்தானா? என்பதை உறுதி செய்துவிட்டு என்ன விஷயம் என்றேன். அவர் பசும்பொன் படம் பார்த்தேன் அதனால்தான் ராதிகாவிடம் பேச வேண்டும் என்றார். இத்தனை நாட்களுக்கு பிறகும் அந்த படத்தில் ராதிகா நடித்ததைப் பற்றி அவர் பேசுகிறாரென்றால், அந்த கதாபாத்திரம் நிறைய பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுதான். இன்றைக்கும் ராதிகாவின் நடிப்பைக் கொண்டாட நினைக்கும் இயக்குநர்கள் ஏன் அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணக்கூடாது. சினிமாவில் திறமை இருப்பவர்களை வைத்து இயக்குநர்கள் மார்கெட்டை உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன்” என்றார்.