/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc-Cover-rpthfpefool4sficgo0n14hne4-20190802000028.jpg)
'பகல் நிலவு' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் 'மௌன ராகம்', 'நாயகன்', 'தளபதி', 'ரோஜா', 'பம்பாய்', 'அலைபாயுதே', 'ராவணன்', 'ஓ காதல் கண்மணி', 'செக்கச் சிவந்த வானம்' உட்பட பல்வேறு படங்கள் மூலம் தமிழ் சினிமாவை உலகளவில் பெருமைப்பட செய்தவர் இயக்குநர் மணிரத்னம். 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி பிறந்த மணிரத்னம், இன்றோடு 65 வயதை நிறைவு செய்வதை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "பொழுதுபோக்கு துறையின் மகா குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த விசேஷ நாளில் சர்வவல்லவரின் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது ஏராளமாக பொழியட்டும்" பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)