நடிகை சரண்யா பொன்வண்ணன் தந்தையும், பிரபல மலையாள டைரக்டருமான A.B.ராஜ் காலமானார்,அவருக்கு வயது 92. மலையாள திரையுலகில் பிரபலமான டைரக்டரான ஆண்டனி பாஸ்கர் ராஜ், சுமார் 65 படங்களை இயக்கியுள்ளார். 1950களின் இந்திய சினிமாக்களில் முக்கியமான சினிமா இயக்குநராக இருந்தார். சிங்கள மொழியில் 6 படங்களும், தமிழில் ‘துள்ளி ஓடும் புள்ளி மான்’, ‘கை நிறைய காசு’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும், நடிகை சரண்யா பொன்வண்ணனை திரைத்துறையில் நடிக்க ஊக்கப்படுத்தியது அவரது தந்தை டைரக்டர் A.B.ராஜ். ‘நாயகன்’ படத்தில் சரண்யா அறிமுகமாக அவரே முழு காரணமாக இருந்துள்ளார். தற்போது, சென்னையில் மகள் சரண்யா பொன்வண்ணனுடன் வசித்துவந்தடைரக்டர் A.B.ராஜ் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு காலமானார்.