Advertisment

'நான் சொன்னது விஜய் சேதுபதிக்கு நடந்தது'... சரண்யா பொண்வண்ணன் சொன்ன உண்மை 

saranya ponavannan

Advertisment

விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ & பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை சரண்யா பேசியபோது.... "நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா என கேட்பார். அப்போது நான் உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/GM93Bwduw1s.jpg?itok=9D9mN-vL","video_url":" Video (Responsive, autoplaying)."]}

vijaysethupathi junga sayyessa
இதையும் படியுங்கள்
Subscribe