Advertisment

“நீங்க யாரு...” - வாக்குவாதத்தால் சரக்கு பட விழாவில் பரபரப்பு

sarakku movie event issue

ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'சரக்கு'. இதில் கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வருகிற 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் திரையிடப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரையிடல் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை அறிமுகம் செய்த ஒருவர், படத்தில் வழக்கறிஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகப் படக்குழு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குற்றஞ்சாட்டினார்.

Advertisment

பின்பு அவரை, “யார் நீங்க...உங்களை யார் அழைத்தார்கள்”என மன்சூர் அலிகான் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. பின்பு அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே அனுப்பிவிட்டனர். அவர் இந்த படத்திற்கு தன்னை யாரும் அழைக்கவில்லை எனவும் பேனரை பார்த்து வந்ததாகவும் கூறுகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Mansoor Ali Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe