Skip to main content

லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்! 

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
santhosh sivan

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த திரைப்படம் மாநகரம். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி, அடுத்து கமல்ஹாசனின் படத்தை இயக்குவதாக உள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படம் மாநகரம். 

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து சிறிய இடைவேளைக்கு பிறகு கார்த்தியுடன் இணைந்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படமும் 100 கோடி வசூலை ஈட்டியது. தற்போது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கிய இடத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜின் முந்தைய இரண்டு படங்களும் இந்தியில் ரீமேக்காக உள்ளன.

 

அந்த வகையில் இந்தியில் உருவாகும் கைதி படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது மாநகரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். புதுமுக நடிகர்களை வைத்து உருவாகும் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முதல் இந்திய ஒளிப்பதிவாளர்’ - சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த பெருமை

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Santosh Sivan Becomes The First Indian Cinematographer To Receive cannes film festival Pierre Angénieux Tribute

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை புகழ்பெற்ற பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டீக்கின்ஸ் உள்ளிட்ட 10 பேர் வாங்கியுள்ள நிலையில், இவ்விருதினைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெறவுள்ளார். 

1986 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறை மூலம் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி எனப் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து தமிழில் அதிக படம் பணியாற்றியுள்ளார். இதுவரையில் 12 தேசிய விருது வாங்கிய அவர், இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.