santh

விஜய், முருகதாஸ் ஆகியோர்கூட்டணியில் உருவானதுப்பாக்கி இன்றும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம். இந்தப் படத்தில்காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க ஹாரிஸ்ஜெயராஜ்இசையமைத்திருப்பர். சந்தோஷ் சிவன், முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாகப் பணிபுரிந்த படம். இதனைத் தொடர்ந்து 'ஸ்பைடர்', 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

Advertisment

விஜய் நடிப்பில்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்முருகதாஸ் கூட்டணியில் 'துப்பாக்கி- 2' படம் உருவாக உள்ளது என்றும் தகவல் வெளியானது.

Advertisment

அந்தச் சமயத்தில் சந்தோஷ் சிவன்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதன் மூலமாகசமூக வலைத்தளங்களில் 'துப்பாக்கி- 2' உறுதியாகிவிட்டது,சந்தோஷ் சிவன்ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் என்றெல்லாம் செய்தி வெளியாகத் தொடங்கியது.

இந்நிலையில், சந்தோஷ் சிவன்இந்தத் தகவலுக்கு தனதுட்விட்டர் பதிவின் மூலமாகமுற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், "எனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதர படங்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன். இதில் எந்தவொரு குறிப்புமே இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் உருவான 'துப்பாக்கி- 2' படம் குறித்தான பேச்சுக்களுக்குஇப்பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisment