Skip to main content

பாலியல் குற்றங்கள் குறைய ஐடியா கொடுத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் 

Published on 28/04/2018 | Edited on 30/04/2018
santhosh p jayakumar


நடிகர் கவுதம் கார்த்திக் நடிகைகள் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. 'ஹரஹர மஹாதேவகி' புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

 

 

 

 

அப்போது அதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசுகையில்.... "இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். 'A' சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை. அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம். கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் மூலம் பாலியல் வன்கொடுமைகள் குறைக்கும் நோக்கில் 'சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள்', அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்" என்றார்.

ஒரு பக்கம் படத்தை படுமோசமாக எடுத்துவிட்டு கடைசியில் திடீரென்று ஒரு மெசேஜ் போட்டு மெர்சல் ஆக்குகிறார்கள் என்றால், மறுபக்கம் மெசேஜ் என்பதற்கே அர்த்தமில்லாமல் இப்படியும் செய்கிறார்கள். நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதா அல்லது உண்மையில் இவைதான் தீர்வா என்று தலை சுற்றுகிறது. தமிழ் சினிமாவை  மெசேஜ் பைத்தியம் விட்டு விலக வேண்டும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனரின் அடுத்த வேலை... - கஜினிகாந்த் விமர்சனம்

Published on 05/08/2018 | Edited on 06/08/2018

 

maniyarfamily

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி ஜானரை அறிமுகப்படுத்தி பல்வேறு தரப்பிலிருந்து திட்டுவாங்கி ஹிட் கொடுத்த சன்தோஷ் பி ஜெயக்குமார் முதல்முறையாக நல்ல ஃபேமிலி படம் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், சில காலமாக தோல்விப் படங்களையே கொடுத்த ஆர்யாவுக்கு கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் என வெளியாகியிருக்கும் 'கஜினிகாந்த்' இருவரின் குறிக்கோளையும் நிறைவேற்றியுள்ளதா?

 

arya



ரஜினிகாந்த் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிறந்து 'கஜினி' போல மறதி கொண்டிருப்பதால் அவர் கஜினிகாந்த். மறதி நோயால் கஷ்டப்படும் ஆர்யா தனக்குள்ள பிரச்னையை எப்படி ரகசியமாக வைத்து ஹீரோயின் சாயிஷாவை காதலித்து, பின் அவர் தந்தை சம்பத்திடம் நல்ல பெயர் வாங்கி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் என்பதே படம். 

 

sayeesha



ஆர்யாவுக்கு மிக எளிதான பாத்திரம். இயல்பாக நடித்துள்ளார், ஆங்காங்கே உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றுள்ளார். இந்தப் படத்தில் நமக்குப் பிடித்த 'பாஸ்' ஆர்யாவைப் பார்க்கலாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு  இது அவரின் மறுபிரவேசம் என்றே சொல்லலாம். அழகு, மெழுகு சிலை சாயீஷா அப்பாவி கதாநாயகியாக வருகிறார். நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு குறைவே. ஆர்யாவின் தந்தை ஆடுகளம் நரேன், நண்பர் சதிஷ், ஆகியோர் வரும் சில காட்சிகள்தான் படத்தின் பெஸ்ட் மொமெண்ட்ஸ். குறிப்பாக இவர்கள் பங்குபெறும் ஆள்மாறாட்ட காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. மொத்த படத்திலும் நமக்கு கிடைக்கும் ஆச்சரியம் ஆடுகளம் நரேன்தான். அதிகமாக இவரை சீரியஸாகவே பார்த்த நமக்கு இந்தப் படம் சிரிப்பு சர்ப்ரைஸ். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் எல்லோரும் தங்கள் பணியை சரியாக செய்து சிரிக்கவைத்துள்ளனர். சம்பத், வழக்கம் போலவே கோபமாக வருகிறார், அவரும் தன் பங்குக்கு சிரிக்கவைக்கிறார்.

 

gajinikanth



'பலே பலே மகாதிவோய்' தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சன்தோஷ் பி ஜெயக்குமார். தெலுங்கில் உரிமை வாங்கி எடுக்கும் அளவுக்கு புதிய கதை அல்ல. சபாஷ் மீனா டூ உள்ளத்தை அள்ளித்தா, உள்ளத்தை அள்ளித்தா டூ கஜினிகாந்த் என காட்சிகள் அப்படியே ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் பொழுதுபோக்குக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸையாவது தமிழில் எடுக்கும்போது சற்று மெருகேற்றியிருக்கலாம். அடல்ட் காமெடி மட்டுமல்ல இப்படி ஒரு படமும் எடுக்க வரும் என நிரூபித்துவிட்டார் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர். எந்த வகை படமாக இருந்தாலும் கலர்ஃபுல்லாக காட்சி ரீதியில் தரமாக உருவாக்குவது சன்தோஷின் பலம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கும் இப்படம் ஆறுதல் வெற்றியாக அமைகிறது.

 

 


பல்லுவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல். பால முரளி பாலுவின் பாடல்களும் பின்னணி இசையும் ஓகேதான். மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்பவர்களை வருத்தப்பட வைக்கமாட்டார் 'கஜினிகாந்த்'.

ரசிகர்களும் கஜினியைப் போலவே பழைய படங்களை மறந்துவிட்டு சென்றால் என்ஜாய் பண்ணலாம்.



 

 

Next Story

'பல்லு படாம பாத்துக்க' பட டைட்டில் காரணம் இதுதான்' - இசையமைப்பாளர் ஓபன் டாக்

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
balamurali

 

'பீச்சாங்கை' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான பாலமுரளி பாலு அடுத்ததாக 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்கள் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து வித்யாசமான படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிராபிக் ராமசாமி' படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து இவர் அடுத்ததாக 'கஜினிகாந்த்', 'பல்லு படாம பாத்துக்க', 'தட்றோம் தூக்குறோம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றியும், தற்போது இசையமைத்திருக்கும் டிராபிக் ராமசாமி படத்தை பற்றியும் பாலமுரளி பாலு நம்முடன் பேசும்போது.... 

 

 


"நான் இசையமைத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தாண்டி அதில் இடம்பெற்ற 'அழுக்கு ஜட்டி அமுதவள்ளி' பாடலால் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. யு டியூபில் இந்த பாடலுக்கு அமுதவள்ளி என்ற பெண் 'என் பெயர் அமுத வள்ளி. நீங்கள் இந்த பாடலை போட்டதனால் நண்பர்கள் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். எனக்கு ஒரு அழுகையாக வருகிறது' என்று கமண்ட் செய்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது.

பின்னர் அந்த பெண்ணிடம் வேறு ஒரு ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு சமாதானம் படுத்தினேன். அதிலிருந்து இனி பொறுப்புடன் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஒரு 85 வயது முதியவர் இந்த வயதில் இவ்வுளவு செய்யும்போது நாம் நம் வாழ்வில் என்ன செய்தோம் என்று தோன்றியதை சவாலாக எடுத்துக்கொண்டு நான் இசையமைத்த படம் 'டிராபிக் ராமசாமி'. படத்தில் வரும் உணர்ச்சிகரமான பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

 


நான் அடுத்து இசையமைத்திருக்கும் 'கஜினிகாந்த்' படம் குடும்பத்துடன் சென்று பார்க்கும் யு சான்றிதழ் படமாக இருக்கும். ராகங்களை முன்னிறுத்தி வரும் பாடல்கள் இப்போது அபூர்வமாக உள்ளதால், இப்படத்தில் 'ஸ்ரீ ராகம்' என்ற ராகத்தில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளேன். மேலும் இந்த பாடல் உட்பட மொத்தம் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இதையடுத்து நான் 'பல்லு படாம பாத்துக்க' படத்திற்கு இசையமைத்துள்ளேன். இது ஒரு  'சோம்பி' வகை காமெடி படம். படத்தின் டைட்டிலான 'பல்லு படாம பாத்துக்க' என்பது சோம்பிவுடைய பல் நம் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அப்படி சோம்பி பல் நம் மேல் பட்டால் நாமும் சோம்பி ஆகிவிடுவோம் என்பதனால் இப்படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இதுவரை நான் இயக்குனர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் கொடுத்தேன். இந்த படத்தின் இசை அப்படி இல்லாமல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். படத்தில் பேய்களின் சத்தத்தை வைத்து ஒரு பாடலும், ஜாஸ் கலந்த டப்பாங்குத்து பாடலும், ஒரு வித்தியாசமான குத்து பாடலும் உள்ளது. இதைத்தொடர்ந்து நான் புதுமுகங்கள் நடிக்கும் 'தட்றோம் தூக்குறோம்' படத்திற்கும் இசையமைத்து வருகிறேன்" என்று மனம் திறந்து பேசினார்.