/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/santhosh-p-jayakumar_0.jpg)
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ்..
இந்நிலையில் அவருடைய அடுத்த படமும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இரண்டாம் குத்து என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்பின் பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்திலிருந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, பாரதிராஜாவை கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இதனைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், “ ‘இரண்டாம் குத்து' படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குனர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குனர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)