santhosh narayanan

2018-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான அந்தாதூண், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இந்திப்படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்தியில் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடந்து, படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு அனைத்து மொழி தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டினர். இக்கடும் போட்டிக்கு மத்தியில், அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

Advertisment

அவரது மகனான பிரசாந்த் அப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனரான ஜே.ஜே பிரட்ரிக் இயக்குகிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இத்தகவலை, இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment