Advertisment

முதல் முறையாக யுவன் இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

santhosh narayanan sang in Yuvan's music for the first time

Advertisment

இயக்குநர் ராம் ‘பேரன்பு’ படத்தைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில், நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ இப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இப்படத்தின் முதல் பாடல் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுதியிருந்தார்.இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஏழேழு மலை’ எனத் தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். நாளை (05-07-24) மாலை 6 மணியளவில் வெளியாகும் இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இப்பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

santhosh narayanan yuvan shankar raja Yezhu Kadal Yezhu Malai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe