‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளார். மேலும், நடிகை வாணி போஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சீயான் 60' படத்திற்காக முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அனிருத், திடீரென விலகியதால் புதிய இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது இந்தப் படத்திற்கான இசைப் பணிகளில் ஈடுபட்டுள்ள சந்தோஷ் நாராயணன், பறை இசைக் கலைஞர்கள் சுற்றிநின்று வாசிக்க நடுவில்குத்தாட்டம் போடுகிறார். அந்தவீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.