santhosh narayanan about pa ranjith

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘நீயே ஒளி...’ என்ற தலைப்பில், பிரம்மாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இந்நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 10000 பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் சந்தோஷ் நாராயணன்.

Advertisment

அவர் பதிலளிக்கையில், “சார்பட்டா பரம்பரை படத்தில் நீயே ஒளி பாட்டு ரொம்ப புடிக்கும். அது புத்தரின் ஒரு சொல்லும் கூட. என்னை முதல் படத்தில் கை கொடுத்து கூட்டி வந்தவர் ரஞ்சித். தலைப்பில் வரும் ஒளியில், ஒலி என்றும் எடுத்து கொள்ளலாம். அதன் இரண்டு பொருளிலே நிகழ்ச்சி தலைப்பு வைத்திருக்கிறோம். மொத்தம் 3 மணி நேரம் ப்ளான் பண்ணியிருக்கோம்.

Advertisment

எல்லாரையும் இன்வைட் பண்ணியிருக்கேன். அறிவுக்கும் மெசேஜ் போட்டேன். ப்ளாக் பன்ணியிருக்கார்னு நினைக்கிறேன். ரிப்ளை வந்தா தெரியும். என்ஜாய் எஞ்சாமி சர்ச்சையால் கொஞ்சம் கோவமா இருப்பாங்க. அப்புறம் எதுனால இப்படி நடக்குதுன்னு தெரிஞ்சதும் சரியாகிவிடும். அதுக்காக வெயிட் பண்ணுறேன்” என்றார்.

சந்தோஷ் நாராயணன் பா. ரஞ்சித்தின் அட்ட கத்தி மூலம் சினிமாவிற்கு வந்து, தொடர்ந்து ரஞ்சித்தின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ஆனால் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது மற்றும்ஏப்ரலில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தில் கமிட்டாகவில்லை. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இருப்பதாக ஒரு தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானதும் மற்றும் ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில் அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானதும் நினைவுகூரத்தக்கது.