/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/212_17.jpg)
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதிக்கு வாழ்த்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும், பந்தயங்களும், போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கணும். இந்தக் கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானம் உதயநிதியின் நண்பனாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியிருந்தார். உதயநிதியும் சந்தானமும் இணைந்து வரும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.
நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும், பந்தயங்களும், போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கணும்!
இந்தக் கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி @Udhaystalin ?
— Santhanam (@iamsanthanam) December 14, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)