மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக ஏ1 நாயகி தாரா அலிஷா பெர்ரி மற்றும் இன்னொரு நாயகியாக புதுமுக நடிகை சுவாதி முப்பலா நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300_3.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தினை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)