/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/06_22.jpg)
'கிக்' படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகிஇயக்குகிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க பீரியட் காமெடி ட்ராமா ஜானரில் படம் உருவாகி வருகிறது. பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார் சந்தானம். அங்கு மூன்று கிலோமீட்டர் தூரம்உள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்தார். பின்னர் மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்குசமீபத்தில் குடமுழுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திரை பிரபலங்கள் வருகை தருகின்றனர். அண்மையில் சமந்தா, இயக்குநர் பிரேம் குமார் மற்றும் திருமண தம்பதியான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)