santhanam

Advertisment

ஒவ்வொரு படத்திற்கும் புது புது நாயகிகளை அறிமுகம் செய்வது வரும் நடிகர் சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்காக இரண்டு புதிய கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் கடுப்பான நடிகர் சந்தானம் சமீபத்தில் கொல்கத்தா சென்று இரண்டு மாடல் அழகிகளை அழைத்து வந்து நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தானம் தற்போது டிக்கிலோனா, டகால்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவான சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.