Advertisment

Santhanam starring Agent Kannayiram movie teaser out now

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார், இவர் ‘இனிமே இப்படிதான்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக்கிலோனா' மற்றும் 'சபாபதி' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Advertisment

இதனைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் இயக்குநர்மனோஜ் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடிக்கிறார். குக் வித் கோமாளி புகழ், ரெடின்கிங்ஸ்லி, முனீஷ்காந்த் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்குயுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையேபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.