/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/298_14.jpg)
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. கதாநாயகியாக சுரபி நடிக்க மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆஃப்ரோ என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய சந்தானம், "நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக 'டிடி ரிட்டர்ன்சை' முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். 'தில்லுக்கு துட்டு' முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
படத்தில், பேய் எல்லாரையும் சாகடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அது தான் எங்களை வாழவைக்கிறது. படத்தில் நடித்த பெப்சி விஜயன் பார்க்கிறதுக்கு ரகட் பாய் மாரி இருப்பார். ஆனால் பழகுவதற்கு சாக்லேட் பாய். அவருக்கு எல்லாமே தெரியும்.கிட்டத்தட்ட 529 படம் பணியாற்றியிருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 40 படங்கள் சில்வர் ஜுப்லி கொண்டாடியிருக்கும். சல்மான்கானே எழுந்து சலாம் அடிக்கிற ஒரே ஆள் அவர் தான்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)