தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து சந்தானம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

santa

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் ஏ1 படம், ஆர்.கண்ணன் இயக்கும் ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த படம்தான் சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இரண்டு படம். ஆர், கண்ணன் இயக்கத்தில் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது படப்பிடிப்பு.

இதற்கிடையில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார் சந்தானம். இதில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பையில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு டகால்டி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி மற்றும் சந்தானத்தின் ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

போஸ்டரில் சிகரெட் பற்ற வைப்பதுபோல சந்தானம் போஸ் கொடுத்திருப்பதால், இந்த போஸ்டருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் கண்டனம் தெரிவிப்பாரா என்று ட்விட்டரில் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

முன்னதாக சர்கார் படத்தில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டருக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்தும், விஷால் பீர் பாட்டிலை வைத்திருப்பதுபோல அயோக்யா பட போஸ்டர் வெளியானதற்கும் சர்ச்சையை எழுந்தது குறிப்பிடத்தக்கது.