Published on 28/03/2020 | Edited on 28/03/2020
கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 37 வயதான சேதுராமன், தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்படுகிறார்.

எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். நடிகரும் சேதுராமனின் நண்பனுமான நடிகர் சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும் கண்ணீருடன் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்றார்.