தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானத்திற்கு ஏ1 படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே ‘டகால்டி’ என்ற படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் சந்தானம். இந்த படத்திற்கான ஷூட்டிங் மூன்று மாதங்களில் முடிவடைந்தவுடன் தில்லுக்கு துட்டு 3 படத்தை அதிக பட்ஜெட்டில் எடுக்க சந்தானம் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

Advertisment

santhanam

Advertisment

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் எம்.கே.எஸ் குமரவேல் ஸ்ரீபெரும்புதூரில் எம்.கே.எஸ். கால் டாக்சி நிறுவனம் ஒன்றை திறந்துள்ளார். இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சந்தானம், அந்த அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் சந்தானம்.

அடுத்த என்ன படம் வெளியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, “ஜூலை மாதத்தில் ஏ1 என்ற படம் வெளியாகிறது” என்றார். இதனையடுத்து சந்தானம் ஏன் இவ்வளவு மெலிதாகினார் என்ற கேள்வியை ஒருவர் கேட்க, “அதற்கு அவர் டக்கால்டி என்ற ஒரு படத்திற்காக உடல் எடையை குறைக்கிறேன். அதன் பின் மூனு வேளை பிரியாணி சாப்பிட்டால் உடல் எடையை கூட்டிடலாம்” என்று கலாய்யாக பதிலளித்தார்.

மேலும், “சர்வர் சுந்தரம் படம் தயாரிப்பு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது விரைவில் அந்தப்படம் வெளியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.