Santhanam playing cards - First look poster released by the film crew

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார். 'சபாபதி' படத்தை தொடர்ந்து இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் ரத்னா குமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடித்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'குலுகுலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கலர் ஃபுல்லாக வெளிவந்திருக்கும் இந்த போஸ்டரில் சந்தானம் கேரட் கடித்துக்கொண்டு சீட்டுக்கட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த படம் அதிக பயணம் செய்யக்கூடிய ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment