Advertisment

மறைந்த நண்பனின் க்ளினிக்கை திறந்து வைத்த சந்தானம்!

santhanam

Advertisment

'கண்ணா லட்டு தின்ன ஆசையா?'படத்தில் சந்தானத்தோடு இணைந்து கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன். தொடர்ந்து 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா'ஆகிய படங்களிளிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர், கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். கரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் சந்தானம் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்தார்.

சேதுராமன் அடிப்படையில் ஒரு மருத்துவர். தோல் மருத்துவ நிபுணரான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 'ஜி கிளினிக்'என்ற தோல் வியாதிகளுக்குசிகிச்சை அளிக்கும் ஸ்கின் கேர் க்ளினிக்கை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனை சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இதன் கிளையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. அதைத் தொடர்ந்து, நடிகரும் டாக்டருமான சேதுராமனின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தக் கிளையை அவரது நண்பர் நடிகர் சந்தானம் இன்று திறந்து வைத்துள்ளார்.

நடிகர் சந்தானம், தனது ட்விட்டர் பக்கத்தில் சேதுராமன் கட்அவுட்டோடு நிற்கும் படத்தை வெளியிட்டு, "எனது அன்பு நண்பன் சேதுராமனின் பிறந்தநாளன்று, அவரது 'ஜி' மருத்துவமனையை, ஈ.சி.ஆரில் திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Santhanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe