“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல” - தனது ஸ்டைலில் சந்தானம் 

santhanam movie Inga Naan Thaan Kingu trailer released

சந்தானம்வடக்குப்பட்டிராமசாமிபடத்தைத்தொடர்ந்து தற்போது ஆனந்த்நாராயண்இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கோபுரம்பிலிம்ஸ்அன்புச்செழியன்வழங்க,சுஷ்மிதாஅன்புச்செழியன்தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகிபிரியாலயாநடித்துள்ளார். முக்கியகதாபாத்திரங்களில்தம்பிராமையாவும்,மனோபாலாவும்நடித்துள்ளனர்.

இவர்களுடன்,முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன்,கூல்சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் தலைப்பு மற்றும்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைகமல்ஹாசன் அவரதுஎக்ஸ்தள பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். படத்திற்கு 'இங்க நான் தான்கிங்கு'எனத்தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.கலர்ஃபுல்லாகஅந்தபோஸ்டர்அமைந்திருந்த நிலையில் வருகிற கோடைக்கு இப்படம்வெளியாகுவதாகக்குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின்ட்ரைலர்தற்போது வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த இளைஞனாக வரும் சந்தானம்திருமணத்திற்குப்பெண் தேடுகிறார். பின்பு திருமணம் முடிந்த பிறகு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறர். அதிலிருந்துதப்பித்தாரஇல்லையா? என்பதைகாமெடிகலந்து சொல்லியிருப்பது போல்ட்ரைலர்அமைந்திருக்கிறது. மேலும் சந்தானம் “நடிகர்சங்கத்தைக்கட்டிமுடிச்சிட்டுத்தான்கல்யாணம்பனண்ணுவேன்னுஅடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல.எப்பவும்சிங்கிளாசுத்திகிட்டுஇருக்கிறதுக்குசிம்புவும்இல்ல” எனட்ரலைர்ஆரம்பத்தில் பேசும் வசனம் வழக்கமான அவரது கிண்டல் கலந்தஸ்டைலில்இடம்பெறுகிறது. இப்படம் மே 10ஆம் தேதிவெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Santhanam
இதையும் படியுங்கள்
Subscribe