/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1827.jpg)
சந்தானம் கிக் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ்இயக்க கதாநாயகியாகதான்யா ஹோப் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை,ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான் என்றுவிளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகன் ஒவ்வொரு செயலிலும் கிக்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டிக்காக எலியும் பூனையுமாக மோதிக்கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன்'சந்தானம்' பாணியில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் தொடங்கிய இப்படத்தின்படப்பிடிப்பு, அடுத்தகட்டமாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்துபாங்காக்கில் 15 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. நடந்து இதன் படப்பிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)