கடந்த 2016ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. சந்தானம் முதன் முதலில் சினிமாவுக்கு அறிமுகமாக காரணமாக இருந்த லொல்லு சபா குழுவுடன் இணைந்து இந்த படத்தில் நடித்தார் சந்தானம். லொல்லு சபா இயக்குனர் ராம்பாலாதான் இப்படத்தை இயக்கினார். சந்தானத்துடன் கருணா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி என பலர் காமெடி நடிகர்கள் நடித்திருந்தனர். காமெடி பேய்ப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

santa

முதலாம் பாகத்தின் வெற்றியை அடுத்து 2018ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக சந்தானம் அறிவித்தார். இதன்பின் இப்படம் கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியானது. இப்படமும் முந்தைய பாகத்தை போலவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisment

மூன்றாம் பாகம் வரை வந்திருப்பதால் தொழில்நுட்பத்தில் அசத்த வேண்டும் என்று 3டியில் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி, இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தையும், சந்தானத்துடன் சேர்ந்து இவர்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment