Santhanam on the field with the Kannada director; Photo goes viral

Advertisment

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக்கிலோனா' மற்றும் 'சபாபதி' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'சந்தானம் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது.

இந்நிலையில் 'சந்தானம் 15' படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக 'தன்யா ஹோப்' நடிக்கிறார். இது குறித்தான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'பார்ஜுன் பிளம்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, பாங்காங், லண்டன் ஆகிய இடங்களில் நடத்தவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் இதுவரை ஏற்று நடிக்காத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.