Advertisment

அந்தக் கட்சியில் இணையப் போகிறீர்கள் என தகவல் வெளியானதே? பதிலளித்த சந்தானம்

santhanam

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்காக திரையரங்கில் வெளியாகியுள்ள படம் 'பிஸ்கோத்'. திடீரென திரையரங்கில் இப்படம் வெளியிடப்பட்டதால் பெரிதாக விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.

Advertisment

இதனால் படம் வெளியான திரையரங்கம் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று விசிட் செய்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சந்தானத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவரும் பதிலளித்தார்.

Advertisment

இதனிடையே பாஜகவில் சந்தானம் இணையப்போவதாக சமூக வலைதளத்தில் பரவிய தகவல் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில், "இது 'பிஸ்கோத்' படத்தை விட பெரிய காமெடியாக இருக்கிறது. எதுக்குப்பா அதெல்லாம். முதலில் இருக்கிற வேலையைச் சரியாகச் செய்வோமே” என்று தெரிவித்தார்.

Santhanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe