biskoth

‘ஜெயம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிஸ்கோத்’. இந்த நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படத்தில் ராஜா, ஸ்பார்டன்ஸ், 70களின் ஹீரோ கெட்டப்களில் சந்தானம் நடித்துள்ளார். ‘ஏ1’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெர்ரிதான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisment

இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பலரையும் கவர்ந்தது. ட்ரைலரை பார்க்கையில் பாகுபலி, ஸ்பார்டன்ஸ், பில்லா உள்ளிட்ட படங்களை ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

Advertisment

தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் திரயரங்குகள் திறக்கப்படாமல் இருக்கிறது. மேலும் எப்போது திறக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்ய படக்குழுவும் பிரபல ஓடிடி நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.