Skip to main content

பிரபல நடிகருடன் போட்டி போடும் சந்தானம்

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

  Santhanam and Arun Vijay movie will be released on the same day

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார், இவர்  இனிமே இப்படிதான், தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக்கிலோனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

இதனிடையே நடிகர் சந்தானம் இயக்குநர் சீனிவாச ராவ் இயக்கத்தில் 'சபாபதி' படத்தில் நடித்துள்ளார்.  ‘கூக் வித் கோமாளி’ புகழ், எம்.எஸ். பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனையடுத்து வரும் நவம்பர் 19 ஆம் தேதி சபாபதி படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில் சபாபதி படத்திற்கு போட்டியாக அதே நாளில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. குற்றம் 23 படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் மீண்டும் இயக்குநர் அறிவழகனுடன் இணைத்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சபாபதி' படத்தின் டிரைலர் நாளை  வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.