Advertisment

பாலிவுட் நடிகையுடன் களமிறங்கும் சந்தானம் 

santhanam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாஜிராவ் மஸ்தானி' ஹிந்தி படத்தில் நடித்த யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், தெலுங்கு நடிகர் சாய்குமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவுள்ளார். தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1’ என்ற பெயரில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

Santhanam lollusabha
இதையும் படியுங்கள்
Subscribe