அகம் பிரம்மாஸ்மி என்று முதன் முறையாக முழுக்க சமஸ்கிருத மொழியில் வெளியான படத்தை இயக்கியவர் ஆசாத். இந்த படத்தில் இவர் இயக்குநர் மட்டும் இன்றி எழுத்து, பாடல், நடிகர் என பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாம்பே டாக்கீஸ், இதை தயாரித்து வெளியிட்டது.

aazad

Advertisment

Advertisment

தற்போது இந்நிறுவனம் ஆசாத்துடன் இணைந்து அடுத்து தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பெயர் ராஜ்யவீரன். இந்த படத்தில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்சய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இந்திய தேசியவாத கொள்கையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் கருத்துகளையும், அடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.