Advertisment

"கடினமான உழைப்பு; ஆனால் வெறுப்பை கக்குகிறார்கள்" - கே.ஜி.எஃப் நடிகர் வேதனை

sanjay dutt talk about shamshera movie troll

Advertisment

கரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஷம்ஷேரா' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் படம் திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பைப் படம் பெறவில்லை, மாறாகக் கலவையான விமர்சனங்களையே பெற்றது

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="baa1b95a-070d-4591-b0b3-a0f8ac36e59b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_20.jpg" />

இதனைத்தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இதைப்பார்த்து கடுப்பான படத்தின் இயக்குநர் இயக்குநர் கரண் மல்கோத்ரா ஷம்ஷேரா படத்திடம் பேசுவதுபோல ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஷம்ஷேரா, " நீ எப்போதும் இருப்பது போல கம்பீரமானவன். இந்தத் தளத்தில் உன் மீது அன்பு, வெறுப்பு, இழிவு காட்டப்படுகிறது. இந்த வெறுப்பைக் கையாள முடியாமல் நான் அமைதி காத்ததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அந்தப் பலகீனத்திற்கு மன்னிப்பே கிடையாது. இப்போது நான் உன்னுடன் இருக்கிறேன். நீ நான் இயக்கிய படம் என்பதில் பெருமை கொள்கிறேன். இனி எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இவரை தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத், கடினமான உழைப்பை கொட்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் நிறைய பேர் குறை கூறுகிறார்கள். அதிலும் பலர் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை வெளிப்படுத்துவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் தத் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த கே.ஜி.எஃப் படத்தில் அதீரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Bollywood Sanjay Dutt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe