Skip to main content

"கடினமான உழைப்பு; ஆனால் வெறுப்பை கக்குகிறார்கள்" - கே.ஜி.எஃப் நடிகர் வேதனை

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

sanjay dutt talk about shamshera movie troll

 

கரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஷம்ஷேரா' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் படம் திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பைப் படம் பெறவில்லை, மாறாகக் கலவையான விமர்சனங்களையே பெற்றது 

 

ad

 

இதனைத்தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இதைப்பார்த்து கடுப்பான படத்தின் இயக்குநர்  இயக்குநர் கரண் மல்கோத்ரா ஷம்ஷேரா படத்திடம் பேசுவதுபோல ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஷம்ஷேரா, " நீ எப்போதும் இருப்பது போல கம்பீரமானவன். இந்தத் தளத்தில் உன் மீது அன்பு, வெறுப்பு, இழிவு காட்டப்படுகிறது. இந்த வெறுப்பைக் கையாள முடியாமல் நான் அமைதி காத்ததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அந்தப் பலகீனத்திற்கு மன்னிப்பே கிடையாது. இப்போது நான் உன்னுடன் இருக்கிறேன். நீ நான் இயக்கிய படம் என்பதில் பெருமை கொள்கிறேன். இனி எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இவரை தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத், கடினமான உழைப்பை கொட்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் நிறைய பேர் குறை கூறுகிறார்கள். அதிலும் பலர் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை வெளிப்படுத்துவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் தத் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த கே.ஜி.எஃப் படத்தில் அதீரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸில் போட்டி? - சஞ்சய் தத் விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.